இலங்கையில் உச்ச கட்டத்தை தொட்டுள்ள கலவரம்: வருத்ததில் ஐக்கிய நாடுகள் சபை

139

இலங்கையில் வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 27-ஆம் திகதி கட்டாய மதமாற்றம் செய்வதாக இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் நிலவியது.

இதில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

இக்கலவரம் உச்சகட்டத்தை தொட்டதால் கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இப்படி நெருக்கடி நிலையைக் கண்டு கனடா வெளிவிவகார அமைச்சர் பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இலங்கையில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் வருத்ததை அளிப்பதாகவும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.