பிரபாகரன் உயிருடன் இருந்ததை உறுதி செய்த அவரின் நண்பர்! பிரபல ஊடகம் தகவல்

940

விடுதலைப் புலிகளின் தலைமை பற்றி இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றில் பேசப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஆர்யா தற்போது நடத்திவரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒவ்வொரு பெண்களின் வீட்டுக்கும் நேரடியாக சென்று பார்த்து வருகிறார்.

அவர் இலங்கை பெண் சுசானாவின் சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது, அங்குள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு முதலில் ஆர்யா சென்றார்.

அங்கு உறவினர் ஒருவர் இலங்கையில் போர் சமயத்தில் நடந்த கொடூர சம்பவங்கள் பற்றி கூறினார். இதன்போது விடுதலைப் புலிகளின் ஆரம்ப நிலை குறித்தும் தெரிவித்தனர்.

‘எப்போது வேண்டுமானாலும் ஷெல் தாக்குதல் நடக்கும், இறந்தவர்களின் உடல்களை எரிக்க கூட நேரம் இருக்காது. அனைத்து பிணங்களையும் வண்டியில் கொண்டு போய் மொத்தமாக வைத்து எரிப்போம். சில சமயம் எரிக்க மரம் இருக்காது, அப்போது பெரிய கிடங்கு வெட்டி 30 பேரை மொத்தமாக புதைத்து விட்டோம்’ என அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் பிரபாகரன் ஆரம்பநிலை போராளியாக இணைந்திருந்திருந்தார். இதன்போது தங்களின் வீட்டுக்கு இரு முறை வந்து சென்றதாக குறிப்பிட்டார்.

எனினும் அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்ட தாக்குதலில் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், தான் சாகவில்லை, உயிருடன் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக பிரபாகரன் அறிவித்தார்.

அன்றைய காலப்பகுதியில் பிரபாகரனை பார்க்க சென்ற போது அவர் உண்மையானவரா அல்லது போலி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், தமது வீட்டுக்கு பிரபாகரன் வரும் போது நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திக் கொண்டதாக சுசானாவின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

source: jvpnews