ஐபிஎல் போட்டியை உதறித்தள்ளிய தமிழ் ரசிகன்: செய்த ஆச்சரிய செயல்

331

சென்னை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர் ஒருவர் எரித்து கழிவறையில் போடுவது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணியும் அதன் சொந்த மண்ணில் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது.

இப்போட்டி இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் இளைஞர்கள் உட்பட பலர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் போட்டியை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் போட்டியை பார்க்கப் போகும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக சென்னை ரசிகர் ஒருவர் இன்றைய போட்டியை பார்பதற்காக வாங்கிய டிக்கெட்டை எரித்து கழிவறையில் போட்டுள்ளார்.

டிக்கெட்டின் ஆரம்ப விலையே 1,300-க்கும் மேலாக உள்ள நிலையில் சிலர் பிளாக்கில் 3,000 ரூபாய்க்கு எல்லாம் டிக்கெட் வாங்கியிருந்தனர்.

நாங்கள் அதிகமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம், அது எப்படி எங்களால் போகாமல் இருக்க முடியும் என்று பலர் கூறியும் வரும் நிலையில், இந்த இளைஞரின் செயல் வைரலாக பரவி வருகிறது.