நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்: 200 பேர் பலி?

275

அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 200 பேர் பலியாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வட ஆப்பிரிக்காவின் அல்ஜிரியாவில் உள்ள Boufarik விமானநிலையத்திற்கு அருகே திடீரென்று இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதனால் 200 பேர் பலியாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு 14-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து உள்ளுர் நேரப்படி காலை 8 மணியளவில் நடந்துள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.