பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு

538

அமெரிக்காவில் பள்ளி மாணவனுடன் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியையை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அமெரிக்காவின் Florida மாகாணத்தில் Evangelical Christian என்ற பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் Suzanne Owens(35).

இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவனுடன் முதலில் பேச ஆரம்பித்துள்ளார். அதன் பின் மொபைல் மூலம் இருவரும் பேசி வந்த நிலையில், கடந்த வாரம் இருவரும் பள்ளிக்கு வெளியே மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

இது குறித்த தகவல் உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக குறித்த ஆசிரியையை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து எங்களுக்கு முன்பே தெரியாது எனவும், இன்று தான் எங்களுக்கு தெரிந்தது எனவும் இதனால் மாணவனின் குடும்பத்திரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து பொலிசார் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.