போராட்டக் களத்தில் புதுமணத் தம்பதி- உண்மை சம்பவம்

137

தூத்துக்குடியின் இன்று திருமணமான புதுமண தம்பதியினர், திருமணம் ஆடையுடனே போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, இரண்டாவது நாளாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருமணமான ஜோசப்- ஷைனி ஆகிய இருவரும் வீட்டிற்கு கூட செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.