வெளிநாட்டு வங்கியை அலற விட்ட இந்தியன், போன பின் பார்த்து சிரித்த அதிகாரிகள்..? ஆணித்தனமாக நெத்தியடி அடித்த..

0
393

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற பேங்கிற்குள்  நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த ஆபிசரிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும்.

தற்போது தான்,  இந்தியாவிற்கு   செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த ஆபிசர் , உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்று சொல்ல,

இவரோ  தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த ஆபிசரிடம் கொடுத்தார். கூடவே லைசென்ஸ் போன்ற பேப்பர்களையும் கொடுத்தார்..

ஆபிசரோ  இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அவர் சென்ற பின்பு சிரித்தனர்..

இந்தியா சென்று ,திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் இரண்டு வாரத்திற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக்கொடுத்தார்.

அந்த ஆபிசர், சார், உங்களுடன் பிசினஸ் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரே ஒரு விசயம்தான் எனக்கு இன்னும் புரியல,

உங்களைப் பத்தி நாங்க வெளிய கேட்டோம், நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது.

ஒரு பெரிய கோடீஸ்வரர் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்,

அதற்கு அந்த இந்தியர்,

எனக்கு இங்கு கார் நிறுத்தும் பார்கிங் வசதி இல்லை. பிறகு நான் யோசித்தேன்.. எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை நிறுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று..

அது மட்டுமின்றி பல இடத்தில விசாரித்தும் பல டாலர்கள் கேட்டாங்க..ஆனால் இங்கு 5.41 டாலர் தான் ஆச்சு..

இப்போ சொல்லுங்க யார் புத்திசாலி..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *