சாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்

1292

மனைவிக்கு கணவன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய அபூர்வ சம்பவம் யாழ்ப்பாணம் மாதகலில் நடைபெற்றுள்ளது.

இங்கே படத்தில் உள்ள இளைஞர் இந்தப் பெண்ணை 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து, பின்னர் உழைக்க என வெளிநாடு சென்றுவிட்டார். அங்கிருந்து லட்சக் கணக்கான பணத்தை உழைத்து மனைவிக்கு அனுப்பிக்கொண்டு இருந்த இவர். தனது விசா சரி வந்த உடனே மனைவியையும் வெளிநாடுக்கு அழைக்க முற்பட்டார். அப்போது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்கள் திருமணம் முடித்தவேளை சாட்சிக் கையெழுத்து போட்ட நபர், தன் மனைவியோடு குடித்தனம் நடத்துவதை கண்டறிந்த இளைஞர் பெரும் அதிர்ச்சியடைந்தார். குறித்த குறித்த யுவதி தமது பதிவு திருமனத்துக்கு சாட்சியாக கையொப்பமிட்ட ,36 வயதான கணவரின் நண்பருடன் ஆலயம் ஒன்றில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கணவன் தனது மனைவி இறந்து விட்டதாக போஸ்டர் அடித்து இங்குள்ள தனது நண்பர்கள் மூலம் ஊரெங்கும் ஒட்டியுள்ளார்.