மக்கள் இசை கலைஞன் செந்திலுக்கு மிகப்பெரிய பாடகரிடம் இருந்து வந்த பாராட்டு- கொண்டாடும் மக்கள்

470

மக்கள் இசை என்பது சில இசைக் கலைஞர்களுக்கே தெரியாது என்று கூட கூறலாம். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கும் அப்படிபட்ட இசை என்றால் என்ன கேட்க எப்படி இருக்கும் என்று வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர் செந்தில்-ராஜலட்சுமி தம்பதி.

வாரா வாரம் அவர்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வைரல். இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல விருதுகளை குவித்த பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் கலந்து கொண்டிருக்கிறார்.

அவர் செந்தில் அவர்களுடன் இணைந்து பாடுவதும் ஒட்டுமொத்த அரங்கமும் கொண்டாடுவது போல் ஒரு புரொமோ வந்துள்ளது.

அதோடு ஷங்கர் மகாதேவன் மக்கள் இசை கர்நாடக இசையை விட உயர்ந்தது என்று கூறியுள்ளார். இது கண்டிப்பாக மக்கள் இசை நாயகன் செந்திலுக்கு கிடைத்த ஒரு வாழ்த்து, பாராட்டு என்றே கூறலாம்.