கணவனுக்கு மனைவி வழங்கிய வித்தியாசமான தண்டனை

404

மெதகம பிரதேசத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனுக்கு வித்தியாசமான தண்டனையை மனைவி வழங்கியுள்ளார்.

இனிமேல் வீட்டிற்கு வரமாட்டேன் என கூறி சென்ற கணவர் மீண்டும் குடிபோதையில் வந்துள்ளார். வழமையை போன்று சமையல் செய்து முடித்துவிட்டு மனைவி தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார்.

இதன்போது வீட்டிற்கு வந்த கணவர் உணவு சுவையாக இல்லை கூறி கூச்சலிட்டுள்ளார்.

கணவனிடம் பேச்சு கொடுத்தால் சண்டையில் முடிந்து விடும் என அறிந்த மனைவி கறுவாடு கொண்டு வந்து தருவாக கூறி சென்று பச்சை கறுவாட்டை சட்டியில் போட்டு கொடுத்துள்ளார்.

கணவர் குடிபோதையில் சமைத்த கறுவாடு என எண்ணி பச்சை கறுவாட்டை முழுமையாக சாப்பிட்டுள்ளார். இது குடிபோதையில் வந்தமையால் தண்டனை கொடுக்கும் நோக்கில் மனைவி இவ்வாறு செயற்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.