அரங்கையே அதிரவைத்த சூப்பர் சிங்கர் செந்தில்.. கிராமத்திய பாடகர்களுக்கு பிரபல இசையமைப்பாளர் கொடுத்த அதிர்ச்சி

598

பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் உலக தமிழர்களுக்கு மத்தியில் பிரபலமாகி வருபவர்கள் கிராமத்திய பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் தற்போது அரையிறுதி சுற்றில் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த வாரம் நடைபெறும் அரைஇறுதி சுற்றில் சிறப்பாக பாடும் போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி செய்யப்படுவார்கள். இதற்கு போட்டியாளர்கள் தகுந்த தயாரிப்புகளை கொடுத்து வருகிறார்கள்.

தற்போது போட்டியாளர் செந்தில் பாடிய ’சலோமியா’ பாடலை கேட்டு வியந்துள்ளார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட அவர் செந்தில் பாடி முடித்ததும் நன்றாக பாடினீர்கள் என்று சொல்லி விசில் அடித்துள்ளார்.

பின் ”கண்டிப்பாக உங்களை மாதிரியான ஃபோக் சிங்கர்களை வைத்து ரெக்கார்ட் பண்ண வேண்டும்” என்று உறுதியளித்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். கிராமத்து பாடகர்களால் இப்படி பல வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.