மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை.. அதிர்ந்துபோன லட்சுமி ராமகிருஷ்ணன்

357

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறுபட்ட பிரச்சிணைகளை இந்நிகழ்ச்சி தீர்த்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்நிகழ்ச்சியில் ‘தன் பெரிய மகன் என்னை அடித்ததால் அவனை கொலை செய்து ஜெயிலுக்கு போனேன், என்னை அடித்தது தப்பு என்று கழுத்தில் சிறு கத்தியால் கொலை செய்தேன்’ என்று சுப்பிரமணி என்ற பெரியவர் ஒருவர் கூறி அதிர்ச்சியளித்தார்.

நான் 14 வருடம் ஜெயிலில் இருக்கும் போது என் மனைவி இறந்துபோனார். இலங்கையில் நன்றாக பெருமையுடன் வாழ்ந்து வந்தேன்.

அவருடன் அவர் மகளும் இரு பெண் சிறுமிகளும் வந்து அவரை பற்றி திடுக்கிடும் தகவலை தந்துள்ளனர். தினமும் குடித்து வருவதாகவும், சாகும் வரைக்கும் அவர் குடித்து கொண்டேதான் இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

”அண்ணன் அடித்ததால் தான் நீங்கள் கொலை செய்தீர்களா, இலங்கையில் உறவினர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள்” என்று நிகச்சியில் அழுது கதறி கூறும் காட்சி மனதை உருக்கியுள்ளது.