அப்பா நீங்க தூங்கிகொண்டிருக்கும்போது நான் தங்கப்பதக்கம் வாங்கினேன்: ஏழை மாணவியின் வரலாற்று சாதனை

440

பின்லாந்தின் நடைபெற்ற இருபது வயதுக்குப்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் தடகளத்தில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவின் நம்பிக்கையை திறந்து வைத்திருக்கிறார் ஹிமா தாஸ்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் TRACK எனும் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை வசப்படுத்தினார்.

நாகோன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமத்தை சேர்ந்த இவரது தந்தை ரஞ்சித் தாஸ் ஒரு விவசாயி ஆவார். ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதனை முயற்சியுடன் களமிறங்குபவர்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார, பிரச்னைகளை எதிர்கொண்ட ஹிமா தாஸின் குடும்பம் பல்வேறு வலிகளை கடந்து இன்று, தேசத்தின் ஒட்டுமொத்த பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

வுகாத்தியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைத்தார். நிப்பன் தாஸ் என்ற பயிற்சியாளரால் ஹிமா தாஸின் திறமை மெரூகூட்டப்பட்டது.

தொடக்கத்தில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்ட ஹிமா தாஸ் பின்னர் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

தங்கப்பதக்கம் கழுத்தில் அணிவிக்கப்பட்ட போது அவரது கண்ணீர் ததும்பியது. தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட இவர், தனது தந்தையிடம் போனில் தெரிவித்த வார்த்தை, அப்பா நீங்கள் எல்லோரும் தூங்கிகொண்டிருக்கையில் நான் தங்கப்பதக்கத்தை வாங்கினேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.