உள்ளாடை தெரிந்ததற்காக தண்டிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனைக்கு குவியும் ஆதரவு

277

விளையாடுமிடத்தில் சட்டையைக் கழற்றும்போது உள்ளாடை தெரிந்ததற்காக நடுவரால் தண்டிக்கப்பட்ட பிரான்ஸ் டென்னிஸ் வீராங்கனைக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு பெருகுகிறது.

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டி ஒன்றின் நடுவில் வெப்பம் அதிகமாக இருந்ததால் ஓய்வெடுக்கச் சென்ற பிரான்ஸ் வீராங்கனை Alize Cornet மீண்டும் டென்னிஸ் கோர்ட்டுக்குத் திரும்பியபோது தற்செயலாக தனது சட்டையை மாற்றிப் போட்டிருப்பதைக் கவனித்தார்.

உடனடியாக தனது ராக்கெட்டை கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு தனது சட்டையைக் கழற்றி சரியாக அணிந்தார்.

வெறும் 10 விநாடிகளுக்குள் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் விளையாட்டின் நடுவரான Christian Rask, Alize Cornet விளையாட்டு விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிப்பதாக அறிவித்தார்.

பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பின் விதிகளின்படி டென்னிஸ் கோர்ட்டிலிருக்கும்போது பெண்கள் உடை மாற்றுவதற்கு அனுமதியில்லை.

ஆனால் ஆண்கள் உடை மாற்ற தடையில்லை. Alizeக்கு ஆதரவாகவும் நடுவருக்கு எதிராகவும் உலகெங்குமிருந்து குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

ஸ்காட்லாந்து டென்னிஸ் கோச்சான Judy Murray இந்த சம்பவத்தை ட்விட்டரில் பதிவிட்டு ஆண்கள் மட்டும் உடை மாற்றலாம் என்று நக்கலாகக் கூறியிருந்தார்.

முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான Casey Dellacqua அவரது ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வேடிக்கைதான் என்று ட்வீட்டியிருந்தார்.

சமீபத்தில் தான் செரீனா வில்லியம்சின் உடைக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான செயலாக பார்க்கப்படுகிறது.