7 நாட்களில் வழுக்கை தலையில் முடி வளர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

405

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வது தான்.

முடி உதிர்தல் கூட எல்லோருக்கும் உதிர்வது போல் இருந்தால் அது சாதாரண பிரச்சனை தான். அதுவே வழுக்கை தலை வரை சென்றால் அவர்களால் இரவில் நிம்மதியாக தூங்க கூட முடியாது

மேலும் வழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் சில பயனுள்ள வழிகளைப் பற்றி பார்ப்போம்.

ஆளிவிதை

ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன்தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

வாரத்திற்கு மூன்று முறை 3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, 2 கப் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்

பின் அதிலிருந்து வரும் ஓர் ஜெல்லை இறக்கி குளிர வைத்து அதை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன.

வாரத்திற்கு 2 முறை வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

இளநீர்

இளநீரில் உள்ள வெள்ளை நிறப் பகுதியை அரைத்து சாறு எடுத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் நெல்லி

விளக்கெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, வழுக்கை உள்ள இடத்திலும் முடி வளர ஆரம்பிக்கும்.

அதிமதுர வேர்

அதிமதுர வேருக்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது.

எனவே 1/4 கப் அதிமதுர வேர் பொடியை சிறிது பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, வழுக்கை உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் தலையில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.

செம்பருத்தி பூ

செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து கலந்து ஸ்கரப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து தலையை குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

இதனால் செம்பருத்திப் பூ மயிர்கால்களை வலிமைப்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் பொடுகுத் தொல்லை, நரைமுடி போன்றவற்றையும் போக்கும்.

முட்டை மாஸ்க்

2 முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை தனியாக ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கரப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.