ஈழப்போரில் இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

531

இலங்கையில் நடந்த ஈழப்போரின் போது இறந்த தாயின் மார்பில் பால் குடித்த குழந்தை ராகினி தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கடந்த 2008 – 2009 வரை நடைபெற்ற ஈழப்போரில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்டனர்.

போர் முடிந்து பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இன்றளவிலும் தமிழர்கள்தம் மனதில் நீங்காத ஒரு சோக சம்பவமாகவே இருந்து வருகிறது.

இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் என்னும் கிராமத்தில் 2009-ம் ஆண்டு மே 18-ம் நாள் தான் ஈழப்போர் முடிவுக்கு வந்தது. அதனை நினைவு கூறும் விதமாக உலகளவில் வாழும் தமிழர்கள் அனைவரும், அன்றைய தினம் போரில் இறந்தவர்களுக்கு தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

காண்போர் கண்களில் கண்ணீரை ததும்ப வைக்கும் ஏராளமான போர் புகைப்படங்கள் உலகளவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் போது, தாய் இறந்தது கூட தெரியாமல் அவருடைய மார்பில் பிஞ்சு குழந்தை ஒன்று பால் குடிக்கும் புகைப்படமும் வெளியாக அனைவரின் இதயத்தை உலுக்கியது.

அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற 8 மாத குழந்தையின் பெயர் ராகினி என்பது தற்போது தெரியவந்துள்ளது. 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ராகினி, அவரது அப்பம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார். போரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தன்னுடைய ஒற்றை கையினை இழந்துள்ளார். அவருக்கு ஆசிரியராக உருவாகி, எதிர்காலச் சந்ததியினருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே… குழந்தைகளின் நெஞ்சு சளி, இருமல் குணமாக பாட்டி வைத்தியம்