இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த நிலையை வெளியிட்ட சின்மயி: சிக்கி கொண்ட பிரபலத்தின் விளக்கம் இதோ

417

பிரபல நடன இயக்குனர் கல்யாண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இலங்கை பெண் வெளியிட்ட பதிவை சின்மயி ஷேர் செய்ததது குறித்து கல்யாண் விளக்கமளித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறிய சின்மயி, பிரபலங்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் எழுதிய பதிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அப்படி, இலங்கை பெண் ஒருவருக்கு பிரபல நடன இயக்குனர் கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த பதிவை அவர் ஷேர் செய்தார்.

அதில், நான் இலங்கையில் பட்டிகலோ பகுதியில் பிறந்தவள். தற்போது, கொழும்பில் வசிக்கிறேன்.

2010-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன்.

அப்போது கல்யாண் மாஸ்டரை சந்தித்து அவரிடம் நடனம் கற்றேன்.

ஆனால், சில நிமிடங்களிலேயே அவர் என்னைத் தகாத முறையில் தொடுவதை உணர்ந்தேன். எனக்குத் தலைவலி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் என் அலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டார்.

அந்த இரவே, எனக்கு போன் செய்து, தன்னுடன் ஓர் இரவு இருந்தால் உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொள்வேன் என்றார். நான் அந்த அழைப்பைத் துண்டித்தேன் என பதிவிட்டார்.

இது குறித்து பேசிய கல்யாண், இப்படி ஒரு செய்தியை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது.

நான் டான்ஸ் கிளாஸ் எல்லாம் நடத்தியதில்லை. ஷூட்டிங்கில் மட்டும்தான் வேலை பார்த்திருக்கேன்

பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கேன். அப்படி ஒருத்தரை நான் சந்திச்ச ஞாபகமே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் இப்படி ஒரு புகார் சொல்றதும், அதைச் செய்தியாக்குவதும் எந்த வகையில நியாயம்.

எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.