பிக்பாஸில் காதலர்களாக வலம் வந்த ஜோடிகளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…

336

பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டு நெருக்கம் காட்டிய மகத் – யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாக கவனம் பெற்றார்.

சக போட்டியாளரான மகத்தை காதலிக்கிறேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பின்னர் “நாங்கள் நண்பர்களாக தொடர்கிறோம்” என்று கூறி சர் ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிக்பாஸ் முதல் சீசனில் நெருக்கமாக இருந்து ரொமான்ஸ் காட்டிய ஹரீஸ் கல்யாண் மற்றும் ரைஸா ஜோடி, நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

இந்த படம் ஹிட் அடிக்கவே ‘இஸ்பேர்ட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் ஹரீஸ் கல்யாண் நடித்து வருகிறார்.

இதேபோல் சீசன் டூ-விலும் நெருக்கமாக இருந்த மகத் – யாஷிகா ஜோடி புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளதாகவும், அறிமுக இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.