மனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன்! 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்… மீண்டும் கர்ப்பமான மனைவி

434

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டிலேயே 10 முறை பிரசவம் பார்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணன் என்பவரது மனைவி சாந்தி (45). இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. இதில் மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

மனைவியின் பிரசவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே யார் துணையுமின்றி பார்த்து வந்துள்ளார். இதில், தற்போது 8 குழந்தைகள் உயிரோடு உள்ளனர்.

இந்நிலையில் சாந்தி மீண்டும் கர்ப்பமுற்றார். இதையறிந்த அப்பகுதி சுகாதார செவிலியர்கள் சாந்தியை மருத்துவமனைக்கு வருமாறு பலமுறை அழைத்தும் வர மறுத்துள்ளார். மேலும் தன் வீட்டிலேயே கணவர் மூலம் பிரசவம் பார்த்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவருக்கு சோதனை செய்ததில் ரத்தசோகை இருப்பது தெரியவந்தது.

தற்போது, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சாந்திக்கு நான்கு பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் பதினோறாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.