முதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை: 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்

395

இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனைவியை கொலை செய்துவிட்டு, இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்த வந்த நபர் தற்போது பொலிசில் சிக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் தருண் ஜினராஜ் (42). இவருக்கும் சஜினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2002 டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

சரியாக மூன்று மாதம் கழித்து 2003 பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர் தினத்தன்று சஜினியை கழுத்தை நெரித்து தருண் கொலை செய்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னர் வேறு பெண்ணை காதலித்து வந்த தருண், அவருடன் சேருவதற்காகவே சஜினியை கொன்றுள்ளார்.

இதன் பின்னர் தருண் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் எவ்வளவு தேடியும் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் சமீபத்தில் மீண்டு தூசிதட்டி எடுக்கப்பட்டது.

பொலிசார் சமீபத்தில் மத்தியபிரதேசத்தில் உள்ள தருணின் தாய் அன்னம்மா வீட்டை கண்டுப்பிடித்து அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அன்னம்மா பக்கத்து வீட்டில் விசாரித்த போது, அன்னமா அடிக்கடி பெங்களூருக்கு செல்வதாக தெரியவந்தது.

அவரின் போனை சோதனை செய்த போது பெங்களூரில் இருந்து ஒரு தொலைபேசியில் அடிக்கடி அவருக்கு போன் வந்தது தெரியவந்தது.

அந்த போன் நம்பர் நிஷா என்ற பெயரில் பதிவாகியிருந்தது.

அந்த முகவரிக்கு சென்று பொலிசார் விசாரித்த போது நிஷா என்ற பெண் பிரவீன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் பிரவீனை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் தருண் தான் தனது பெயரை பிரவீன் என மாற்றி கொண்டு நிஷாவை திருமணம் செய்தது தெரியவந்தது.

மேலும் நிஷாவிடம் தனது பெற்றோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாக தருண் கூறியுள்ளார்.

தன்னை பார்க்க வரும் பெற்றோரை, தனது மாமா, அத்தை என பொய்யாக கூறியதும் தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழை பிரவீன் என்ற பெயரில் தயாரித்து தருண் கால் செண்டர் பணியில் சேர்ந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் தருணை கைது செய்துள்ளனர்.