அதிர்ச்சியில் தமிழர்கள்.. இலங்கையில் மீண்டும் ஹீரோவான மஹிந்த!

402

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதிவியேற்ற நிலையில் தென்னிலங்கையில் பாரிய அதிர்வலைகளை அது ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு அறிவிப்பும் இன்றி முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் பதவி ஏற்றுள்ளார். இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் மக்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதையடுத்து, இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை மக்கள் சுதந்திர கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது.

அவரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியும் அவர் மறுத்து விட்டார்.

இதனிடையே அண்மையில் பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பறிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது ராஜபக்ச கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்லச் சதி திட்டம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சூழலில் இப்படியான அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் இப்போது இணைந்திருப்பதால், பலவேறுவிதமான அரசியலமைப்புச் சிக்கலுக்கு வழிகோலும், ஏனென்றால், 19ஆவது சட்டத்திருத்தத்தின்படி, பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் விக்ரமசிங்கவை நீக்க அனுமதி கிடையாது என்று அரசியல் ஆர்வளர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை, மகிந்தவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தனது உச்ச கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.