பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணை மூலம் ஜனாதிபதியை நீக்க முயற்சி நடவடிக்கை விரைவில்..

562

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, அவரைப் பதவி நீக்குவதற்கான வாய்ப்பை
வழங்கக்கூடிய பெருங்குற்றச்சாட்டுப் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பதவியிலிருந்து நீக்கி, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்தமை, நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வரும் நிலையிலேயே, ஜனாதிபதி மீதான இந்நடவடிக்கைக்கு, அக்கட்சி தயாராகி வருகிறது.