பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்யும் ஆசிரியை: கண் கலங்க வைக்கும் சம்பவம்

503

வெனிசுலா நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக அயல் நாடுகளில் குடியேறும் பெண்கள் பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வருவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

வெனிசுலா நாடு கடும் பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ முன்னெடுத்த பண மதிப்பிழப்பும் அதனை ஒட்டிய கலவரமும் வெனிசுலாவை துண்டாடியுள்ளது.

இதனால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் வெனிசுலாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

ஜனாதிபதி மடுரோவின் புதிய பொருளாதார கொள்கைகள் உரிய பலனை தராதது மட்டுமின்றி கடும் நெருக்கடியையும் உருவாக்கியது.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் அண்டை நாடான கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதில், ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என, பட்டினிக்கு அஞ்சிய பலரும் சொந்த நாட்டை விட்டு வெளியேறினர்.

தங்களது பிள்ளைகளின் உணவு தேவைகளுக்காக பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போதிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதால் வெனிசுலாவில் ஆசிரியர் பணியில் இருந்த பெண்மணி ஒருவர் தமது குடும்பத்திற்காக பாலியல் தொழில் செய்து வருகிறார்.

ஆசிரியராக பணியாற்றி வந்த காலகட்டத்தில் தமக்கு கிடைக்கும் ஊதியமானது ஒரு பாஸ்தா வாங்கவே போதுமானதாக இல்லை என கூறும் அவர், தற்போது பாலியல் தொழிலால் வெனிசுலா பணத்தில் மாதம் 312,000 பொலிவர் அளவுக்கு சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெறும் 3,000 பேர் மட்டுமே கொண்ட அந்த கொலம்பியா நாட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் ஒரு மதுபான விடுதியில் 9 பெண்களில் ஒருவராக பாலியல் தொழில் செய்து வருகிறார் அவர்.

ஒரு இரவில் 30 முதல் 100 டொலர் வரை சம்பாதிப்பதாக கூறும் அவர், தமது தாயாரின் கனவு ஒரு ஆசிரியராக பணியாற்றுவது என்பது. அதை தாம் நிறைவேற்றியதாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி அந்த உயரிய தொழிலை விட்டு தற்போது உடலை விற்று பசியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி கண் கலங்கியுள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும், ஆசிரியர் பணி கிடைத்தால் அது கடவுள் நேரிடையாக வந்து தமக்களிக்கும் வரமாக கருதுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அலிகிரியா என்ற அந்த 26 வயது பெண்மணிக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவரை போலவே பல பெண்களும் இதே நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.