நகைச் சுவை நடிகர் யோகி பாபுவின் காதலுக்காக ஜோதிகா செய்த செயல்! தீயாய் பரவும் புகைப்படம்

332

கடந்த 2017 ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்.

துமாரி சுலு என்ற படத்தை இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன் எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகிறார்.

இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘துமாரி சுலு’ படத்துக்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .

இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார். இவர்களுடன் மனோபாலா, லட்சுமி மஞ்சு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

இந்தப் படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு பின்பு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இந்தப் படத்தில் நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல படங்களில் காமெடி ரோலில் கலக்கிவரும் யோகி பாபு காற்றின் மொழியிலும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

யோகி பாபுவின் காதலுக்கு ஜோதிகா உதவுவதுபோல இதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.