இரட்டைச் சகோதரர்களால் குழம்பிப் போகும் கனடியத் தமிழரின் காதலிகள்…

176

கனடாவில் இளைய தலைமுறையினர் நிகழ்த்தும் வெற்றிகளின் இன்னொரு வடிவமாக கனடிய தமிழ் இசையமைப்பாளரின் இசையமைப்பில் கனடியத் தமிழ் இளைஞர் எழுதிப் பாடிய ஆங்கிலப்பாடல் நேற்று இணையவழியூடாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

அண்மைக்காலமாகவே கனடாவில் உள்ளூர்க் கலைஞர்களின் தமிழ் மொழியில் எடுக்கப்படும் முயற்சியை ஊக்குவிக்கும் படைப்புக்கள் வெளியிப்பட்டுவதும், அவை பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன என்பதும் கண்டறியப்பட்ட உண்மை.

அந்த வகையில் தமிழ் இளையவரான டிலோன் அன்ரணி அவர்கள் எழுதிப் பாடிய இந்தப் பாடலிற்கான இசையை கனடாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான பிரவீன் மணி அவர்கள் வழங்கியுள்ளார்.

தங்களது காதலர்கள் இரட்டைச் சகோதர்கள் என்பது தெரியாமல் காதலிக்கும் இரு யுவதிகள் இரட்டைச் சகோதரர்களில் மற்றயவரை தனது காதலன் என்று நினைக்கின்ற காட்சியினூடாக இந்தப் பாடல் மிகவும் இனியமையாக நகர்கின்றது.

இசையமைப்பாளரிற்கும், பாடலை எழுதிப்பாடியவருக்கும் இதுவே முதல் முயற்சி. அவர்கள் வெற்றிபெற வாழ்த்துவோகனேடியத் தமிழ் இசையுலகின் அடுத்த முன்னேற்றம்: ஆங்கிலப்பாடலால் அசத்தும் கனடியத் தமிழர்கள்.

இந்த இணையத் தள இசைத்தொகுப்பு தமிழர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்று வருகின்றது. இது கனடியத் தமிழர்களின் இளைய சந்ததியை தேசிய நீரோட்டத்துடன் கலக்கும் முயற்சிகளின் முன்னுதாரணமாகும்.