ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான நாய்! என்ன செய்கிறது நீங்களே பாருங்க… அதிசய காணொளி

228

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளில் முதன்மையானதாக நாய் உள்ளது. மனிதர்களுக்கு அதன் மீது தனி பாசமும் இருக்கும். அதனை வீட்டில் ஒருவராக கருதுவர்.

மனிதர்களைப் போல் வாய் விட்டு நாய் ஒன்று சிரிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது மனிதர்களுக்கும், நாய்க்கும் எப்போதுமே பிரிக்க முடியாத பந்தம் உண்டு.

நாய் ஒன்று குதிப்பதற்கு உயிரமான இடத்தில் இருந்து முயற்சிக்கிறது. அந்த நாயை தாங்கிப் பிடிப்பதற்காக அதன் எஜமானர் கீழே தயாராக நின்று கொண்டிருக்கிறார். அருகில் இருப்பவர்கள் நாயை குதிக்கும்படி உற்சாகப்படுத்துகின்றனர்.

தயங்கிக் கொண்டே இருந்த நாய் திடீரென எஜமானர் இருக்கும் பகுதியில் குதிக்கிறது. அவர் அதனை டக்கென தாங்கிப் பிடிக்கிறார். உடனே மகிழ்ச்சியில் நாய் சிரிக்கிறது. தவறாகப் படித்து விட்டோமோ என குழம்பாதீர்கள். மனிதர்களைப் போலவே அந்த நாய் வாய் விட்டு, ‘ஹா ஹா ஹா’ எனச் சிரிக்கிறது.

இந்தக் காட்சிக்களை அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஆனால், நன்றாக கூர்த்து கவனித்தால், நாய் வெறும் வாயைத் தான் அசைக்கிறது. இந்த வீடியோவை எடுப்பவரோ அல்லது அதன் அருகில் நிற்பவரோ யாரோ தான் அதற்கு டப்பிங் கொடுத்துள்ளனர். எது எப்படியோ இந்த வீடியோ மூலம் அந்த நாயும், அதன் உரிமையாளரும் பிரபலமாகிவிட்டனர்.