செல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் கூறிய விளக்கம்?

346

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டி விட்டது குறித்து நடிகா் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை பொரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கருத்தாரிப்பு மையம் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து சிவக்குமாருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனா். இளைஞா் ஒருவரும் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்றார் அப்போது யாரும் எதிபார்க்காத நிலையில் சிவக்குமார் அந்த இளைஞரின் கைப்பேசியை தட்டிவிட்டார். இதில் கைப்பேசி கீழே விழுந்து சிதறியது.

கைப்பேசியை சிவக்குமார் தட்டிவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார் அதில், “செல்பி எடுப்பது அவரவா் விருப்பம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் செல்பி எடுத்துக் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் 200, 300 போ் கலந்துகொள்ளும் விழாவில் காரில் இறங்குவதில் இருந்து மண்டபத்துக்கு செல்வதற்குள் பாதுகாப்புக்கு வரும் நபா்களைக் கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 போ் கைப்பேசியை வைத்து செல்பி எடுக்கிறேன் என்ற பெயரில் நடக்கக்கூட முடியாமல் செய்வது நியாயமா? தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீா்களா? வி.ஐ.பி. என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? என்று கூறியுள்ளார்.