189 பேருடன் நொறுங்கிய விமானம்! விமான நிலையத்தில் அழுத படி மயங்கி விழுந்த உறவினர்கள்: கண்ணீர் வரவழைக்கும் வீடியோ

298

இந்தோனேசியா விமான விபத்தில் 189 பேர் உயிரிழந்த நிலையில் அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர்களின் உறவினர்கள் சிலர் அழுதபடி மயங்கி விழுந்தனர்.

நாட்டின் தலைநகர் ஜகர்டாவில் இருந்து, பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட லயன் நிறுவனத்தின் JT-610 ரக பயணிகள் விமானம் கிளம்பிய 13வது நிமிடத்தில் மாயமானது.

இதையடுத்து விமானமானது கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் இருந்த 189 பயணிகளும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரும், உறவினர்களும் பங்கல் பினாங் விமான நிலையத்துக்கு அழுதபடி வந்தனர்.

அப்போது ஒரு ஆணும், பெண்ணும் கதறி அழுதபடி இருந்தநிலையில் திடீரென மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளித்தனர்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.