189 பேருடன் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்! விமானத்தில் பயணித்த இளைஞனின் புகைப்படம் வெளியானது

628

இந்தோனேஷியாவில் கடலில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.

189 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும்.

6 விமான ஊழியர்கள், இரண்டு விமான ஓட்டிகள், 181 பயணிகள் என 189 நபர்கள் மாயம். அந்த 181 பயணிகளில் 1 குழந்தை மற்றும் 2 பச்சிளங்குழந்தைகளும் பயணித்திருந்தனர்.

இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப் பட்டது. விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்கிற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது உறுதியானது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உடைந்த விமான பாகங்கள் கடலில் மிதப்பதாகவும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், பிரபல ஆங்கில ஊடகம் விமானத்தில் பயணம் செய்த இளைஞர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில் அந்த இளைஞரின் பெயர் Deryl Fida Febrianto எனவும் அவர் தன் தாய் மற்றும் தந்தையுடன் பட்டமளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விமானத்தில் அவர் மாஸ்க் போட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த இளைஞனின் தாய் தன் மகனுக்கு என்ன ஆனது என்பது உறுதியாக தெரியாமல் Pangkal Pinang-ல் இருக்கும் Depati Amir விமானநிலையத்தில் கண்ணீருடன் காத்திருக்கிறார்.

இவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது.

Deryl Fida Febrianto குறித்து விமானநிலையத்தில் இருக்கும் அவரது மனைவி Lutfinani Eka Putri(23) கூறுகையில், விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் இருந்த நிலையில் அவர் புகைப்படம் எடுத்து அனுப்பினார், எனக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பிய படி இருந்தார். அதன் பின் திடீரென்று உள்ளூர் நேரப்படி காலை 06.15மணிக்கு அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

நான் ஏதோ சிக்னல் பிரச்சனை என்று நினைத்தேன், அதன் பின் செய்தியை பார்த்த போது விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்தேன். உடனடியாக என் கணவர் விமானத்தின் நம்பரையும், அதையும் சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன், என் கணவருக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்று கதறி அழுதுள்ளார்.

இதே போன்று Depati Amir விமானநிலையத்தில் ஏராளமான உறவினர்கள் தங்கள் சொந்தபந்தங்களுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால் அங்கிருக்கும் மீட்பு படை அதிகாரி ஒருவர் யாரும் உயிர் பிழைத்திருந்த வாய்ப்பில்லை என்று கூறுகிறார்.

ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இதற்கிடையில் கடலில் பயணிகளின் வாலட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் போன்றவைகளும், விமானநிலையத்தில் தங்கள் உறவினர்களை நினைத்து பலர் கதறி அழுவது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

An Indonesian policeman at Tanjung Priok port in Jakarta holds wreckage recovered from the ill-fated Lion Air flight JT610

Pictured: A passenger's bag retrieved from the water after flight JT-610 slammed into the water. The condition of the phone indicates the plane crashed with great force

Rescuers pulled the belongings of passengers out of the sea, but it is not yet known if anyone survived the crash