உதவ முடிந்தால் நீங்களும் கடவுளே!! புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது பிஞ்சு.. நீங்கள் நினைத்தால் உதவலாம்!

7122

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் துஹிர் என்ற 8 வயது சிறுவனுக்கு நீங்கள் நினைத்தால் உதவலாம்.

கனவு யாருக்குத்தான் இல்லை… ஆண, பெண், ஏழை, பணக்காரன் என்று எல்லோருக்கும் ஒரு கனவு உண்டு. அதேபோல், முடி திருத்தும் தொழிலாளியின் ஒரே மகனான துஹிருக்கும் ஒரு மிகப் பெரிய கனவு இருக்கிறது. அவனுடைய கனவு ஒரு பெரிய மருத்துவராவது. அவன் கனவுக்கு ஒரு எல்லை இல்லை. துஹிர் வீட்டின் அருகில் உள்ள அனைவருக்கும் அவன் கனவு பற்றி தெரியும்.

அவனுடைய டாக்டர் விளையாட்டில் அவன் பரிசோதிக்காத நோயாளியே அந்த இடத்தில் இல்லை. ஒரு நாள் அவன் நிச்சயம் மருத்துவராகி வெள்ளை கோட் அணிவான் என்று அனைவரும் நம்பினர். ஆனால் இன்று அவன் குமட்டி குமட்டி வாந்தி எடுப்பதும், மூச்சு விட சிரமப்படுவதும் எங்கள் நம்பிக்கையை குலைக்கும் விதமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் அவனை பரிசோதிக்க வரும்போது ஊசிக்கு பயந்து கொண்டு துஹிர் என் சேலையின் பின்னால் ஒளிந்து கொள்கிறான். புற்றுநோய் பாதிப்பால் அவன் எடை குறைந்து மிகவும் மெலிந்து நாங்கள் பெற்ற மகனை எங்களுக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டான்.

துஹிர் 8 வயது சிறுவன். அவன் வயதில் உள்ள மற்ற பிள்ளைகளைவிட அதிக புத்திசாலியாக அவன் இருந்தான். பெரிய பெரிய எண்களை கூட்டுவதும், கடினமான பெரிய சொற்களை எந்த ஒரு சிரமமும் இல்லாமல் படிப்பதும் அவனுடைய பெற்றோருக்கு சிறந்த மகிழ்ச்சியை அளித்தது. அவன் பெற்றோர் கர்வம் கொள்ளும் அளவு துஹிரின் அறிவு வளர்ச்சி இருந்தது. துஹிர் விரும்பும் மருத்துவ படிப்பை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று அவன் பெற்றோர் விரும்பினர். ஆனால் விதி வேறு திசையில் விளையாடியது. அவர்களின் அமைதியான கிராமத்து வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.

ஒரு சனிக்கிழமை நீண்ட நேரம் டாக்டர் விளையாட்டு விளையாடிய பிறகு துஹிர் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் படுத்துக் கொண்டான். பிறகு அவனை எழுப்பி உணவு கொடுத்தேன். அப்போது தற்செயலாக அவனுடைய வயிற்றில் என் பார்வை பதிந்தது. அவனுடைய வயிறு சற்று வீக்கமாக இருப்பதை உணர்ந்தேன். மேலும் அவனுடைய வயிறு அசாதாரண வடிவத்தில் இருப்பது போல் எனக்கு தோன்றியது. நாங்கள் யாருமே படிக்காதவர்கள் தான் என்றாலும், இந்த நிலையில் துஹிரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்ல வேண்டும் என்று எங்களுக்கு புரிந்தது.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றோம். இப்படி ஒவ்வொரு மருத்துவரிடமும் சென்று யாராலும் இவன் நிலைமையை கண்டறிய முடியவில்லை. எங்கள் பதட்டமும் தீரவில்லை. இரண்டு எக்ஸ்ரே எடுத்து, நான்கு மருத்துவ ஆலோசனை பெற்று எதுவுமே எந்த பலனும் கொடுக்கவில்லை. பிறகு குடும்ப நண்பர் வழியாக ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர், இது ஒரு வகை வயிற்று கட்டியாக இருக்கும் என்று சந்தேகித்தார். இதானல் உடனடியாக துஹிரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கூறினார். மேலும் அவர்கள் வசிக்கும் கொல்கத்தாவில் மருத்துவ வசதி சிறப்பாக இல்லாத காரணத்தால் உடனடியாக சென்னைக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

பலவித குழப்பம், அதிர்ச்சி மற்றும் உண்மை என்னவாக இருக்கும் என்ற மனநிலையோடு நாங்கள் சென்னை நோக்கி பயணப் பட்டோம். நாங்கள் கிராமத்திலேயே எங்கள் வாழ்க்கையை கழித்ததால் கிராமத்தைக் கடந்தவுடன் ஓங்கி நிற்கும் வானளாவிய கட்டிடங்களும் , முகம் தெரியாத மனிதர்களும் எங்கள் பயத்தை மேலும் அதிகமாக்கின. சொந்த ஊரிலிருந்து சென்னை நோக்கி எதற்காக வருகிறோம் என்ற குழப்பம் மற்றும் தன் மகனுக்கு என்னவாயிற்று என்ற எண்ணம் ஆகியவை சேர்ந்து என் மனைவியின் முகத்தில் கவலை ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. எங்கள் நண்பர்களும் சொந்தங்களும் கொடுத்த பணம், இதுவரை செய்த மருத்துவ செலவிற்கும் இப்போதைய இந்த பிரயாணத்திற்கும் போதுமானதாக இருந்தது. கையில் பணம் இல்லாமல் ஒரு புதிய மாநிலத்திற்கு வந்து சேர்ந்தோம்.

தங்கள் மகனுக்கு என்ன பிரச்சனை என்ற கவலையுடன் மொழி புரியாத ஒரு புதிய மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வருவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. இவர்களின் கேள்விக்கு கொல்கத்தாவில் பதில் சொல்ல யாருமே இல்லாத சூழ்நிலையில் இவர்களின் சென்னை வருகை அமைந்திருந்தது.

சென்னை வந்தவுடன் நேரத்தை வீணாக்காமல் உடனடியாக துஹிரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவர்கள் துஹிரை பரிசோதித்தனர். பல மணி நேர கொடுமையான காத்திருப்பிற்கு பின், மருத்துவர்கள் உண்மையைத் தெரிவித்தனர். துஹிர் மிகவும் அரிய வகை நோயான வில்ம் கட்டியால் (Wilm’s tumor) பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். துஹிரின் இடது சிறுநீரகம் இந்த கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தது. பொதுவாக இது ஒரு அரிய வகை நோய் என்றும், குறிப்பாக ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்படுவர் என்றும் கூறினார். ஆனால் துஹிர்க்கு வயது 9. இந்த நோய்க்கு கீமோதெரபி என்ற சிகிச்சையை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தீர்மானித்தனர். ஆறு மாத கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு, ஒரு அறுவை சிகிச்சை செய்வதால் நோயாளி முற்றிலும் குணமாக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர் மருத்துவர்கள்.

துஹிருக்கு இடது சிறுநீரகத்தில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை. எங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்கும் மருத்துவர்கள் கூறுவதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஆனால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என்று அவர்கள் கூறுவதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. துஹிரின் உயிரைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்தோம். புதிய ஊரில், அவனுடைய மருத்துவ செலவிற்காக சேமிக்கும் பொருட்டு, ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். இரண்டு வேளை உணவிற்கான ஒரு சிறு அளவு பணத்தையும் மிச்சம் செய்வதால் எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறோம்.

துஹிரின் தங்கை, அவளுடைய சின்னஞ்சிறு கைகளால், துஹிரின் வயிற்றை அழுத்தி விட்டு, இதனால் அவன் வீக்கம் குறையும் என்று நம்புகிறாள். இங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு சிறு பிள்ளையாக அவள் இருக்கிறாள். அவளுக்கு புரிய வைக்கும் அளவிற்கு அவள் பெற்றோருக்கே துஹிரின் பாதிப்பை பற்றி முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. துஹிரின் தந்தை ஒரு முடி திருத்தும் தொழிலாளியாக மாதம் ரூபாய் 3000 வரை சம்பாதிக்கும் ஒரு நபர். இது வரை அவனுக்கு அளித்த மருத்துவ உதவி மற்றும் பயண செலவிற்கு ரூபாய் 50,000/- வரை செலவாகியுள்ளது. அவர்களின் முழு சேமிப்பும் கரைத்து அவர்களின் சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து கடன் பெறும் நிலையும் வந்துவிட்டது.

இவர்களுக்கு உதவ நீங்கள் என்ன செய்யலாம்?

துஹிரின் உடல் நிலையில் உண்டான மாற்றத்தால் அவர்கள் சொந்த ஊரில் இருந்து வெளியேறும் நிலை உண்டாகிவிட்டது. அவர்கள் ,மேற்கு வங்கத்தில் இருந்து கிளம்பி, சென்னை வந்து மருத்துவ உதவியை பெற்று வருகின்றனர். தற்போது துஹிர் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இங்கிருந்து 1800 கிமி தூரத்தில் உள்ளது அவன் சொந்த ஊர். அவனுடைய வயிறு இரண்டு மடங்கு அதிகமாக வீங்கியுள்ளது. அவன் பெற்றோர் தங்களால் இயன்றவரை எல்லாவற்றையும் செய்து பணம் சேமித்து வருகின்றனர். தற்போது தங்கள் மகனை காப்பாற்ற கூட்டு நிதி திரட்டலில் ஈடுபட்டு வருகின்றனர். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தொகையும் துஹிரின் சிகிச்சைக்கு அவனை விரைவாக அழைத்து செல்லும். இந்த பதிவை உங்கள் நண்பர்கள், குடும்பம் மத்தியில் வாட்ஸ் அப் , பேஸ்புக் போன்றவற்றின்மூலம் பகிர்வதால் அனைவரும் ஒரு சிறு தொகையை அவனுக்கு அளிக்க முடியும். இதனால் துஹிர் ஒரு நாள் நிச்சயம் மருத்துவராகும் கனவு மெய்ப்படும்.

இவருக்கு உதவ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.