காது, மூக்கைத் தொடர்ந்து பிறப்புறுப்பை எடுக்க துடிக்கும் வினோத இளைஞன்.. அதிர்ச்சியான காரணம்!

646

மண்டை ஓட்டின் தோற்றம் எப்படி இருக்கிறதோ அதைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ள மூக்கு மற்றும் இரு காதுகளை இளைஞர் ஒருவர் அறுத்துக்கொண்டுள்ளார்.

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் அடுத்ததாக தனது பிறப்புறுப்பையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற உள்ளார்.

வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை அடைய அல்லது தனக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த பலர் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொள்வது, மூக்கு, காது போன்ற உறுப்புகளில் வளையங்கள் மாட்டிக்கொள்வது என பல வகைகள் இதில் உள்ளன.

பலர் இவ்விஷயங்களில் கொஞ்சம் சீரியஸாக போய் விடுகின்றனர். கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயதான எரிக் ராமிரெஸ் என்பவரும் அதில் ஒருவர். தனது 12-வயதில் தாயை இழந்த எரிக், அதன் பின்னர் உடல் முழுவதும் விதவிதமாக டாட்டூ வரைந்து கொண்டார்.

பிறப்புறுப்பை நீக்க இருக்கிறார்
உச்சகட்டமாக மனித மண்டை ஓடு போல தனது முகத்தை மாற்ற வேண்டும் என விரும்பி, மூக்கு மற்றும் இரண்டு காதுகளை அறுத்து எடுத்துள்ளார். மண்டை ஓட்டின் வாய் பகுதியில் பற்கள் வெளிப்படையாக இருப்பது போல தனது வாயை சுற்றிலும் அதற்கேற்ப டாட்டூ போட்டுக்கொண்ட எரிக், விரைவில் தனது பிறப்புறுப்பையும் நீக்க இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எனக்கு இது தான் ஆசை
“என்னைப் பார்த்து பயப்படுபவர்களை காணும் போது சிரிப்பாக இருக்கும். என்னுடைய தோற்றம் தான் மாறுபட்டுள்ளதே தவிர, நானுன் சாதாரணமானவன்” என்று கூறும் எரிக்கிறகு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.