நடுஇரவில் விமானத்தில் இருந்து காப்பாற்றப்படும் பயணிகள்… விபத்தில் சிக்கிய விமானமா இது?…

514

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்கு நகருக்கு திங்கள்கிழமை காலை 6.20 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

“லயன் ஏர் பேசஞ்சர்ஸ்” எனும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் 210 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. இன்று அந்த விமானத்தில் மொத்தம் 189 பேர் சென்றனர். அவர்களில் 178 பேர் பெரியவர்கள், ஒரு சிறுவன், 2 கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்தனர்.

ஜகர்தாவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் 13-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அந்த விமானத்துக்கும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறைக்குமான தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தை பவ்யே சுனேஜா (31) என்ற இந்திய விமானி ஓட்டிச் சென்றார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசிய #விமான விபத்தில் #பொய்யை பரப்பிய தமிழ் #ஊடகங்கள்விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கபடும் காணொளி…

Posted by நீ ஒரு தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு – Nee Oru Tamilana irundhal Share Pannu on Tuesday, October 30, 2018

அனைவரும் இறந்துவிட்டனர் என்று கூறப்படும் நிலையில் அதே ரக விமானத்தில் இருந்து பயணிகளைக் காப்பாற்றப்படும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. உண்மையில் இது விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயணிகள் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது மட்டுமின்றி அவர்கள் உயிருடன் இருப்பார்களா என்ற எண்ணமும் எழுந்து வருகிறது.