மகளுக்கு வந்த கொடிய நோயால் நடிகைக்கு ஏற்பட்ட அவல நிலை! 4 வருடத்திற்கு முன் நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

398

தமிழ் சீனிமாவில் 90ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி.

அவருக்கு தற்போது 44 வயது ஆன போதிலும் திரைப்படங்களில் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

நடிகை கஸ்தூரிக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் நடிகை கஸ்தூரியின் மகளுக்கு புற்றுநோய் என்றும் மகளின் புற்று நோயை எண்ணி தானும் தூக்கம் இல்லாமல் இருந்து வந்ததால் தனக்கும் துக்கமின்மை என்ற ‘insomnia’என்ற நோய் வந்ததாகவும் நடிகை கஸ்தூரி கூறியுள்ளார் .

என்னுடைய பெண்ணிற்கு 7 வயது இருக்கும் போது எப்போ பார்த்தாலும் காய்ச்சல் வந்துக்கிட்டே இருக்கும்.

ஒருநாள் வைத்தியசாலையில் இருந்து உங்க பொண்ணுக்கு ஹீமோகுளோபின் குறைவா இருக்கு. உடனே, வாங்க’னு அழைப்பு வந்தது.

6 மணி நேரம் ஊசி முனைல நின்னுக்கிட்டு இருந்தோம். பிறகு, டாக்டர் வந்து, நாங்க பயந்த மாதிரியே ஆயிடுச்சு.

எல்லா பரிசோதனைகளும் எடுத்துப் பார்த்துட்டோம். உங்க பொண்ணுக்கு`பிளட் கேன்சர்’ வந்திருக்கு’னு சொன்னாங்க. அந்த நிமிஷம் என்னோட உலகமே இடிஞ்சு விழுந்துடுச்சு. அதுக்குப் பிறகு 4 வருஷமா ஒரே போராட்டம்.

பல நாள் தூக்கமே வராது. அப்படித் தூக்கமில்லாம போனதுல எனக்கு `இன்சோம்னியா’ (Insomnia) வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதான் எனக்கு கடவுள் மேல கோபம் வந்துச்சி. ஆனா, என் பொண்ணுக்கு ஒவ்வொரு தடவை ஊசி போடும்போதும், அவ வலியால அழும்போது அவளுக்கு நான் நம்பிக்கையைக் கொடுக்கணும்கிறதுக்கா சாமி பெயரை சொல்லி தைரியம் கொடுத்தேன். அவ கடவுள் நம்பிக்கையாலதான் அவளோட வலிகளை மறந்தால் என்றும் கண்ணீருடக் கூறியுள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.