வயிறு பலுன் போல உப்பி கொண்டே போகின்றதா! சரி செய்ய ஒரே 1 முறை இப்படி செய்யவும்?

1466

வகை வகையான உணவுகளை சமைத்து வைத்தாலோ அல்லது கடைகளில் உணவை பார்த்தாலோ நம் அனைவருக்கும் ஒரு நொடி நாக்கில் எச்சில் ஊறும்.

இந்த நிலையில் நம் மூளையை முழுவதுமாக கழட்டி வைத்து விட்டு மனசு சொல்லும்படி பிடித்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டு கொண்டே இருப்போம்

இதனால், ஏராளமான பக்க விளைவுகள் நிச்சயம் வரும். அதில் ஒன்று தான், வாயு தொல்லை மற்றும் அதிகமாக வயிற்று பகுதி உப்பி கொண்டே போவது.

பார்ப்பதற்கு ஒல்லியாக இருந்தாலும் பலருக்கு இந்த வயிறு உப்பிசம் மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை எப்படி நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது என்பதை இனி அறிவோம்.

எதனால் உப்பி விடுகிறது..?

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே. குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது.

மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.

அறிகுறிகள் என்னென்ன..?

உங்களுக்கு இந்த பிரச்சினை உள்ளதா..? என்பதை அறிந்து கொள்ள ஒரு எளிய வழி முறை உள்ளது. இவற்றின் அறிகுறிகளை வைத்தே நாம் கண்டறிந்து விடலாம்.

  • வயிற்றில் பாரமாக இருப்பது
  • வயிற்றுக்குள் அதிகப்படியான வாயு தொல்லை
  • அடிக்கடி ஏப்பம் விடுவது
  • வயிற்று வலி
  • அடிக்கடி ஏதே சத்தம் வயிற்றுக்குள் கேட்பது
  • காய்ச்சல், பசியின்மை
டிடாக்ஸ் நீர்

பொதுவாக இது போன்ற பிரச்சினைக்கு நாம் பல வகையான மாத்திரைகளை சாப்பிடுவோம். ஆனால், எளிமையாக இதனை குணப்படுத்த இந்த நீர் ஒன்றே போதும்.

தேவையானவை
  • வெள்ளரிக்காய் 1
  • ஆப்பிள் 1
  • எலுமிச்சை 1
செய்முறை

முதலில் வெள்ளரிகையையும், ஆப்பிளையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். பிறகு எலுமிச்சையை சாறு போன்று பிழிந்து இவற்றுடன் கலந்து உடனே குடித்து விடவும். வேண்டுமென்றால், இந்த ஜுஸை வடிகட்டி குடித்து கொள்ளலாம்.

இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் வயிற்று உப்பசம் காணாமல் போய் விடும்.