189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம்! விபத்திற்கு முன் இருந்த பிரச்சனை என்ன? வெளியான தகவல்

377

இந்தோனேஷியாவில், Lion Air என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.

இந்த்நிலையில் வழக்கம் போல் இந்த விமானம் கடந்த திங்கட் கிழமை விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட 189 பேருடன் ஜகர்தாவில் இருந்து பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு புறப்பட்டது.

அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் தற்போது வரை 40-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விபத்துக்குள்ளான Lion Air விமானம் இந்த விபத்திற்கு முன்னரே தொழில் நுட்ப பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து தற்போது அந்த பிரச்சனை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Lion Air விமானம் Denpasar பகுதியிலிருந்து Jakarta பகுதிக்கு புறப்பட்டது. அப்போது விமானத்தில் unreliable airspeed என்ற தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டிருந்ததாகவும், அதன் பின் அது சரிசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கடைசியாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல்களின் ரெக்கார்டுகளை பார்த்து வருவதாகவும் இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி Denpasar பகுதியிலிருந்து Jakarta பகுதிக்கு விமானத்தை இயக்கிய விமானியிடமும் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.