ஊனமான பெண்ணை மணந்த இளைஞர்: மனைவியை கையில் ஏந்தி அக்னிகுண்டத்தை சுற்றிய நெகிழ்ச்சி தருணம்

237

இந்தியாவில் கால்கள் ஊனமான பெண்ணை எதிர்ப்பை மீறி இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அமித். இவர் வெல்டிங் பணி செய்து வந்தார். சமீபத்தில் மருத்துவமனை ஒன்றில் வெல்டிங் பணியில் ஈடுபட்டார் அமித்.

அப்போது ராணு என்ற கால்கள் ஊனமான பெண் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். பெற்றோர்களை இழந்த ராணு தனியாகவே அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை அமித் செய்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.

அமித்தின் காதலை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை. ஊனமான பெண்ணை அவர் திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தர்மா தொண்டு நிறுவனம் மூலம் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி அமித், ராணுவை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ராணுவுக்கு தாலி கட்டிய பின்னர் அவரை கையில் ஏந்தியபடி அக்னி குண்டத்தை சுற்றி வந்தார் அமித். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து உண்மை காதலுக்கு எடுத்தக்காட்டான ஜோடிகள் என அமித்தையும், ராணுவையும் பலரும் பாராட்டினார்கள்.