தொப்பை இருக்கிறதே என கவலையா? தட்டையான வயிறுடன் வலம் வர இதை செய்தாலே போதும்..!

413

தொப்பையை குறைத்து தட்டையான வயிறுடன் வலம்வர வேண்டும் என்று நினைப்பவர்கள் சரியான உணவுகளை உட்கொண்டு டயட்டை பின்பற்றினாலே போதும்.

முதலில் ஜங்க் உணவுகளுக்கு குட்பை சொல்லிவிட்டு, நார்ச்சத்து- ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்களை சாப்பிட வேண்டும்.

குறிப்பாக அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும்.

தசைகளின் சீரான வளர்ச்சிக்கும், கொழுப்புகளை கரைக்கவும் முக்கிய பங்கு வகிப்பது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் கொழுப்பை குறைக்கலாம்.

பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து, விட்டமின் ஈ மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பாதாமை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கொழுப்புகளை கரைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது குடைமிளகாய், இதிலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபைன் உடல் எடையை குறைக்க உதவி செய்வதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

வேக வைத்த காய்கறிகள் அல்லது பச்சை காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும்.

ஸ்நாக்ஸ் தேவைப்படும் நேரத்தில் ஆப்பிளை உட்கொண்டால் பசியுணர்வு குறைந்து உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.