புழுக்கள் உருவாகும் வரை மாற்றப்படாத டயப்பர், இறந்து கிடந்த குழந்தை: கவனிக்காத பெற்றோர் மீது கொலைக் குற்றச்சாட்டு

734

14 நாட்களாக மாற்றப்படாததால் புழுக்கள் உருவான டயப்பருடன் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் இறந்து கிடந்ததையடுத்து அதன் பெற்றோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Alta Vista என்ற நகரில் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Sterling Koehn என்ற அந்த நான்கு மாதக் குழந்தையை பரிசோதித்தபோது அதன் டயப்பர் 9 முதல் 14 நாட்கள் வரை மாற்றப்படாமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

டயப்பரினுள் பூச்சிகள் சென்று முட்டையிட்டதால், அதிலிருந்து புழுக்கள் உருவாகியிருந்தன.

டயப்பர் ராஷ் என்னும் புண்கள் உருவானதால், மலத்திலுள்ள கிருமிகள் குழந்தையின் உடலுக்குள் நுழைந்ததோடு, போதுமான உணவும் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை கவனிக்க தவறிய அதன் தந்தையான Zachary Paul Koehnமீது குழந்தைக்கு ஆபத்தை விளைவித்தது மற்றும் கொலைக் குற்றம் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

Sterling Koehnஇன் தாய் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றாலும், அவர் மீது பின்னர் தனியாக வழக்கு விசாரணை மேற்கோள்ளப்பட இருக்கிறது.