மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட கணவன்: நேர்ந்த விபரீதத்தின் பின்னணி

663

இந்தியாவில் மனைவியை பிரிந்து காதலியுடன் சேருவதற்காக மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை மோசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் துலசிநாத். இவருக்கு திருமணமாகிவிட்டது.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு படித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய துலசிநாத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மெளனிகா என்ற பெண்ணுடன் துலசிநாத்துக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதையடுத்து மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மெளனிகாவுடனே வாழ நினைத்தார்.

இதனால் மனைவிக்கு அவப்பெயரை ஏற்படுத்த அவரின் அந்தரங்க புகைப்படங்களை மெளனிகாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அதை அவர் வாட்ஸ் அப் ஸ்டேடஸாக வைத்ததுடன், குறித்த பெண் பணத்துக்காக எதையும் செய்பவள் என மோசமாக சித்தரித்துள்ளார்.

மேலும் துலசிநாத்தும், மெளனிகாவும் சேர்ந்து மோசமான மெசேஜ்களை அவருக்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த துலசிநாத் மனைவி இது குறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.