189 பேருடன் கடலில் விழுந்த பயணிகள் விமானம்! முன்னரே அது சரியாக மேலே பறக்கவில்லை: பயணிகளின் பகீர் தகவல்

334

இந்தோனேஷியாவில் விமான விபத்தில் சிக்கிய விமானம், அதற்கு முந்தைய பயணத்தின் போதே தொழில்நுட்ப பிரச்சனை இருந்ததாகவும், பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் Lion Air பயணிகள் விமானம் கடந்த திங்கட்கிழமை(29-ஆம் திகதி) 189 பேருடன் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது வரை 40-க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானம் அதற்கு முன்னர் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 28-ஆம் திகதி போது தொழில்நுட்ப கோளாறு பிரச்சனை இருந்தது, அதன் பின் அது சரி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் அன்று என்ன நடந்தது என்பதை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில், விமானம் Bali-யிலிருந்து Jakarta-வுக்கு புறப்பட்டது. புறப்படும் போது விமானத்தால் உடனடியாக மேலே பறக்க முடியவில்லை, அதில் பிரச்சனை இருந்தது.

சுமார் 8 நிமிடம் வரை இந்த பிரச்சனை இருந்தது, இதனால் விமானம் குலுங்கியது. கிட்டத்தட்ட சொல்லபோனால் ஒரு roller coaster-ல் இருப்பது போன்று இருந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் வாந்தி எடுத்தனர். பீதியில் அலறினர் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி விமானத்தில் சுமார் 30 நிமிடம் இன்ஜினின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாகவும், இதனால் விமானத்தில் வெப்பம் அதிகரித்தாகவும், குழந்தைகளால் இதை தாங்கி கொள்ளவே முடியவில்லை என்று பெண் பயணி ஒருவர் கூறியுள்ளார்.