189 பேருடன் விபத்தில் சிக்கிய விமானம்: ஓட்டி சென்ற இந்திய விமானியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

805

189 பேருடன் கடலில் விழுந்த இந்தோனிய விமானத்தை இயக்கிய இந்திய விமானி பவ்யே சுனிஜாவின் சம்பள விபரம் குறித்து தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகர்டாவில் இருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட JT 610 ரக லயன் ஏர் விமானம் கடலில் விழுந்தது.

இதுவரை விமானத்தில் பயணித்த 49 பேரின் சடலங்களை மீட்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். விமானத்தை இந்தியாவை சேர்ந்த பவ்யே சுனிஜா என்ற விமானி இயக்கினார்.

அவர் இந்த பணியை செய்ய அந்நாட்டு பண மதிப்பில் 3.7 மில்லியன்(Rp) சம்பளமாக பெற்று வந்தது தெரியவந்துள்ளது.

இத்தகவலை BPJS வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் அகுஸ் சுசண்டோ வெளியிட்டுள்ளார்

இதனிடையில் இது மிக குறைந்த சம்பளம் என The Indonesian Pilot Association அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமைப்பின் தலைவர் ரமா நோயா, இது நியாயமான சம்பளம் என நினைக்கவில்லை.

பொதுவாக இந்தோனேசியாவில் விமான கேப்டனாக உள்ளவர்களுக்கு 38 – 45 மில்லியன் வரை சம்பளம் தரப்படும்.

அதுவும் வெளிநாட்டு கேப்டன் என்றால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் விமானி பல்யேவின் சம்பளம் 3.7 மில்லியன் கிடையாது என லயன் விமான நிறுவனத்தின் இயக்குனர் எட்வர்ட் மறுப்பு தெரிவித்துள்ளார்.