கடலுக்குள் நொறுங்கிக் கிடக்கும் இந்தோனேஷிய விமானத்தைக் காட்டும் முதல் வீடியோ வெளியானது

544

ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கடலின் அடியில் 100 அடி ஆழத்தில் சென்று படம் பிடித்த நொறுங்கிக் கிடக்கும் விமானத்தின் பாகங்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.< திங்கட்கிழமை Boeing 737-MAX கடலில் வீழ்ந்து மூழ்கி 100 அடி ஆழத்திலுள்ள கடற்படுகையைச் சென்றடைந்தது. ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், விமானத்தில் பயணித்த 189 பேரில் இதுவரை 72 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் இரண்டாவது கருப்புப் பெட்டியைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரைக் கொடுத்து ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் பதிவு செய்த, நொறுங்கிக் கிடக்கும் விமான பாகங்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.