189 பேருடன் கடலில் விழுந்த விமானம்: சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நீச்சல் வீரர் உயிரிழந்ததால் அதிர்ச்சி

462

இந்தோனேசியாவில் கடலில் மூழ்கிய பயணிகள் விமானம் தொடர்பான தேடுதல் பணியில் ஈடுபட்ட நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகர் ஜகர்டாவில் இருந்து கடந்த திங்களன்று 189 பேருடன் புறப்பட்ட Lion Air பயணிகள் விமானம் கடலில் விழுந்தது.

இதையடுத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 60-க்கும் அதிகமானோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆழ்கடலில் நீச்சலடிக்கும் சயகுரல் அண்டோ (48) என்ற நீச்சல் வீரர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

இதையடுத்து சுயநினைவின்றி மீட்கப்பட்ட அண்டோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அண்டோ இந்த பணியில் அதிக ஈடுபாட்டுடன் இருந்ததோடு, அதிக அனுபவத்தை கொண்டிருந்தார்.

கடந்த 2014ல் ஏர் ஆசிய விமான விபத்து மீட்பு பணி மற்றும் இந்தோனேசியாவில் முன்னர் நடந்த கப்பல் விபத்து மீட்பு பணியுலும் அண்டோ ஈடுபட்டுள்ளார்.

அண்டோ ஒரு உன்னதமான ஹீரோ என மீட்பு குழுவை சேர்ந்த உயர் அதிகாரிகள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.