திடீரென கர்ப்பமடைந்த மாணவி.. அதிர்ச்சியடைந்த பெற்றோர்.. விசாரணையில் வெளியான தகவல்

827

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி திடீரென கர்ப்பமடைந்துள்ள சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரசாந்த், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.

இதற்கு மயங்கிய மாணவி பலமுறை பிரசாந்துடன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென மாணவி கர்ப்பமடைந்திருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, நடந்தவை பற்றி விசாரித்துள்ளனர். ஆனால் பிரசாந்த் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.