அவள் மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்தாள்! ஒரு வருடத்திற்குள் இப்படி மாறிவிட்டது…. அழகிய காதல் கதை

3096

கேரளாவை சேர்ந்த இளம் தம்பதியினர் தங்களது முதல் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட்டு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளனர்.

ஷான் இப்ராகிம் தனது கல்லூரியில் படித்த ஸ்ருதி என்பரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த பின்னர்தான் இப்ராகிம்க்கு தெரியவந்துள்ளது, தனது காதல் மனைவி ஸ்ருதிக்கு புற்றுநோய் இருப்பது. இதனை கேட்டு இருவரும் மனம் உடைந்து போயினர்.

ஆசையாக காதலித்து மணந்த ஸ்ருதியின் தலைமுடி உதிர்ந்து போனது, 9 வது கீமோதெரபி புற்றுநோய் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தார். தனது காதல் மனைவிக்கு ஆறுதலாக இருந்த அவரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள முடிவுசெய்தார் இப்ராகிம்.

இவர்களது திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலையில், இப்ராகிம் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது காதல் மனைவியின் தலையில் முடி உதிர்ந்து மொட்டையான காரணத்தால், தனது தலைமுடியை எடுத்துள்ளார். மேலும், எனது கல்லூரி காலத்தில் ஒரு மல்லிகை பூவாய் எனது வாழ்வில் வந்து, பல்வேறு சவால்களை சந்தித்து அவளை கரம்பிடித்தேன்.

நான் எனது வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது எனக்கு ஆதரவாக இருந்த அவளுக்கு, இப்போது நான் அனைத்துமாக இருப்பேன். பல இதழ்கள் நிறைந்த அழகிய மலர் ஸ்ருதி. எனது தோழி, எனது மனைவி, எனது மகள் என எல்லாமக இருப்பவள் என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.