இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்: வைரலாகும் கவிஞர் வைரமுத்து பதிவு

207

தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சின்மயி கூறிய பாலியல் புகாரில் கவிஞர் வைரமுத்து சிக்கினார். தன் மீது சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என அவர் கூறினார்.

ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு எதையும் வைரமுத்து நடத்தவில்லை.

இந்நிலையில் அரசு வேலை தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் நடத்த வேண்டும் என டுவிட்டரில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம் என பதிவிட்டுள்ளார்.