ஒரே நாளில் ஒரே குடும்பத்தில் இரண்டு மரணம்: தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்…வெளியான பின்னணி

308

இந்தியாவில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்தவர்

குருமூர்த்தி. இவருக்கும் தனலட்சுமி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்த சில வாரங்களிலேயே வரதட்சணை தொடர்பாக கணவன் மற்றும் மனைவி குடும்பங்கள் இடையில் பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான தனலட்சுமி தனது தாய் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குருமூர்த்தியின் பாட்டி உயிரிழந்தார். இது குறித்து தனலட்சுமிக்கு தகவல் தரப்பட்ட நிலையில் கணவர் வீட்டுக்கு காலையில் அவர் சென்றார்.

அங்கு பாட்டியின் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் மாலை 6 மணிக்கு தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த தனலட்சுமியின் பெற்றோர் உடனடியாக அங்கு வந்ததோடு பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பொலிசாரிடம், குருமூர்த்தி மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் தனலட்சுமி தற்கொலை செய்தார் என புகார் கொடுத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் குருமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.