கணவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தில் உள்ள வேறு நபரை மணக்கும் மனைவி.. எங்கு தெரியுமா?

291

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் உயிரிழந்தால் அவர் குடும்பத்தை சேர்ந்த வேறு நபரை மனைவி திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தின் மண்டலா மாவட்டத்தில் உள்ள பிஹங்கா கிராமத்தில் தான் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Gond எனப்படும் பழங்குடியினர் வாழும் இந்த கிராமத்தில் விதவைகளே கிடையாது.

காரணம், ஒரு பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டால் அந்த மனைவி கணவரின் குடும்பத்தில் உள்ள திருமணமாகாத ஆணை மணந்து கொள்ளலாம்.

அந்த ஆண், கணவரின் அண்ணன் அல்லது தம்பியாக தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி விதவையான பெண்ணை திருமணம் செய்ய ஆணுக்கு விருப்பமில்லை என்றால், குறித்த நபர் அந்த பெண்ணுக்கு வெள்ளி வளையலை பரிசாக கொடுக்க வேண்டும்.

அதுவும் கணவர் இறந்த பத்தாவது நாளில் தான் இதை கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.