தாலி கட்டிய சிலம்பரசன்…. மனதில் இருந்த ராம்குமார்: முந்திரி தோப்பில் நடந்த சம்பவம்

681

கடலூர் மாவட்டத்தில் தனது காதலனை மறக்க முடியாத காதலி திருமணமான இரண்டு மாதத்தில் தனது காதலனுடன் இணைந்து தற்கொலை செய்துகொண்டார்.

சிலம்பரசன் என்பவருக்கும், தேவிஸ்ரீ என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில், திருமணமான மாதத்திலேயே சிலம்பரசன் தனது மனைவி ஸ்ரீதேவி காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

முந்திரி தோப்பில் இருவர் ஒரே நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விசாரணையில், தேவிஸ்ரீயும், ராம்குமார் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், பெற்றோர்கள் சம்மதிக்காததால், வேறு ஒருவருடன் திருமண ஆன நிலையில், திருமண வாழ்வை துறந்து முன்னாள் காதலனுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டனர் என தெரியவந்துள்ளது.