தொடர் சோகம்! பிரபல நடிகரின் மரணத்திற்கு இதுதான் காரணம்

408

சின்னத்திரை நடிகர் விஜயராஜ் நேற்றிரவு 1.15 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

42 வயதான இவர், சித்தி, கோலங்கள், மெட்டி ஒலி , நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

எம்டன் மகன், காதலும் கடந்து போகும், செம போத ஆகாத ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக தொலைக்காட்சி தொடர்கள், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.

இப்படி தொடர் சோகத்தில் இருந்த இவர், தீபாவளிக்காக தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு, திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.